Latest topics
CONTACT ADMIN

*~*திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை!*~*

View previous topic View next topic Go down

*~*திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை!*~*

Post by Tamilkings on Sat Feb 19, 2011 11:15 pm

திடீர் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை!






பாலிவுட் நடிகை லாரா தத்தாவும், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும் மும்பையில் நேற்று முன்தினம் திடீரென திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் நடிகை லாரா தத்தா - மகேஷ் பூபதி இடையேயான காதல், தனது முதல் மனைவி ஸ்வேதாவை மகேஷ் பூபதி விவாகரத்து செய்த பிறகு வெளியுலகுக்கு தெரிய வந்தது. 2010ம் ஆண்டு செப்டம்பரில் லாரா தத்தா - மகேஷ் பூபதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இருவரும் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டனர். பாந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டுக்கு திருமண பதிவாளர் நேற்று அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் லாரா தத்தாவும், மகேஷ் பூபதியும் மாலை மாற்றி, ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்தனர். 2 பேரின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. திருமண முடிந்த பிறகு தனது பிளாக்கில் 'திரு மற்றும் திருமதி பூபதியை சந்தியுங்கள்' என மகேஷ் பூபதி எழுதியதை தொடர்ந்தே, திருமணம் விவரம் வெளியுலகுக்கு தெரிந்தது. புதுமண ஜோடி நேற்றிரவு கோவா புறப்பட்டு சென்றது. அங்கு வரும் 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் வென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது. அடுத்தவ புருஷன வளைச்சுப் போடுறதே இவுங்களுக்கு பேஷனா போச்சுப்பா....!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum