Latest topics
CONTACT ADMIN

*~*மழையும் மழை சார்ந்தவையும்*~*

View previous topic View next topic Go down

*~*மழையும் மழை சார்ந்தவையும்*~*

Post by Tamilkings on Sun Feb 13, 2011 12:11 am

மழையும் மழை சார்ந்தவையும்




சடசடவென விழும் கனத்த மழைத்துளிகள்
செம்மண்புழுதித்திடலைப் படிந்திறுகச்செய்யும்.
ஓடும் செம்புலப்பெயல்நீரில்
ஓடாத கனவுக் காகிதக்கப்பல்
கவிழ்ந்து குருதிகசியும்.

அறையின் ஜன்னல் திறந்து
பிற்பகலின் இளஞ்சூட்டு மழையை ரசித்தேன்.
மெல்லியமழை காற்றோடு கலந்து
நதியின் வலிமையோடு அறைக்குள் பாய்ந்தது.
ஜன்னலை மதகாய் மாற்றி அடைத்ததும்
மனசுக்குள் பொழிகிறது
புயலோடுகூடிய பெருமழை.

அதிகாலை மழையால் வியர்த்து வழிகின்றன
மூடிய கண்ணாடி ஜன்னல்கள்.
உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடேற்ற முயன்றேன்.
பாசிபடர்ந்த குளத்தில் இறங்கிய பாதம்
நழுவுவதுபோலக் கைகள் வழுக்குகின்றன.
மீண்டும் மீண்டும் உரசித்தேய்க்கத்
தீப்பொறியெனப் பறந்து
நீர்த்துளியாய் விழுகிறது மழைத்துளி.

விழும் மழைத்துளிகளின் பாரம்தாங்காமல்
ஜன்னலின் தகரக்கிராதி அதிரும்.
அதன் ஏழு வளைவுகளின் வழியே
வெள்ளைக் கொடிபோல மழைநீரிறங்கி
நிலைப்படியின் பாசித்தோரணத்தை நினைவுபடுத்தும்
முன்னால் விழுந்த இலைச் சருகுகளும்
காற்று உதிர்த்த வேப்பமரத்தின் புதுப்பூக்களும்
மழைநீரோடு மகிழ்ந்து சுழன்றிறங்கின.
திடீரென ஒரு வளைக்கரம்
ஜன்னல் வழியே நீண்டு
பறித்து உள்செல்லும்
சில மழைநீர்ப்பூக்களை.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum