Latest topics
CONTACT ADMIN

*~*காதல் பரணி*~*

View previous topic View next topic Go down

*~*காதல் பரணி*~*

Post by Tamilkings on Sat Feb 12, 2011 11:42 am

காதல் பரணி



மலைவெளிகளை அமானுஷ்யமாக்கும் அந்தியின்மீது
இருள் கவிந்த பிறகு
தற்கொலைப் பள்ளத்தாக்கிலிருந்து கிளம்புகிற
ஏக்க மூச்சுகள்
பள்ளத்தாக்கை அடையும் பாதைகள் வழியே
மலையுச்சிகளையும் சமவெளிகளையும் நோக்கித்
திரும்பிச் செல்கின்றன.
அதல பாதாளத்தில் நொறுங்கிக் கிடக்கும்
எலும்புக் குவியலிலிருந்து
உயிர்த்தெழுகிற வைராக்கியங்கள்
பிடிப்பேதுமில்லாச் செங்குத்து மலைப்பிளவில்
பாறையையும் செடி கொடிகளையும் புற்களையும் பற்றியேறி
பள்ளத்தாக்கின் விளிம்பை அடைந்து
செய்வதறியாது திகைக்கின்றன.
உச்சாணிக் கொம்பில் தொங்கும் வெளவால்
சிறகடித்து மறைந்த பிறகு
பள்ளத்தாக்கின் பேராழத்திலிருந்து
குளிரூட்டப்பட்ட மலைநிசப்பதத்தைக் குலைக்கும்படியாக
தமது மரணத்துக்குத் தாமே துக்கிக்கிற
ஆண் எலும்புக்கூடுகளின் குமுறல் கேட்கிறது
மாரடித்து அழும்
பெண் எலும்புக்கூடுகளின் ஒப்பாரி கேட்கிறது.

Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum