Latest topics
CONTACT ADMIN

~~ காலம் கடந்த கணினி காதல்~~

View previous topic View next topic Go down

~~ காலம் கடந்த கணினி காதல்~~

Post by AruN on Sat Feb 12, 2011 12:55 am

காலம் கடந்த கணினி காதல்!



உன் தாவணி வரவை
எதிர்பார்த்து

குட்டிச்சுவரில் தவம் செய்து

நீ உதிர்க்கும் ஒற்றை

மென்சிரிப்பிற்காய்

எம் காலம் முழுக்க

காத்துக் கிடந்து

காலத்தை கடத்தியிருக்கலாம்!

•உன் நாணம் செய்கிற
கோணத்திலும்

கால்கள் போடுகிற

கோலத்திலும்

மட்டுமே நம் காதலை

நாம் உறுதி

செய்துக் கொண்டிருக்கலாம்!

•பேசா மொழியில்
நம் கண்கள் மட்டுமே பேசி

உறவாடி உயிர்ப்பித்தக்

காதலை

இன்னும் கொஞ்சம் நாள்

பேசாமலே பேசியிருக்கலாம்!

•நீ பார்த்து விட்டுப் போன
ஒற்றைப் பார்வைக்காகவே

பலநாள் தூக்கத்தை

தொலைத்து

தூங்கா விரதத்தை

உன் நினைவிலேயே

துவங்கி இருக்கலாம்!

•பக்கத்து வீட்டுப்
குழந்தை பையனை

பத்து பைசா

மிட்டாய்க் காய்

காதல் தூதாக்கி

புறா தூதனுப்பாத

காலத்தின் தேவையை

பூர்த்தி செய்திருக்கலாம்!

•காதல் கடிதங்களும்
தூரத்துக் காற்றிலிட்ட

முத்தங்களுமாய்

நம் காதலை வாழ்வித்துக்

கொண்டிருக்கலாம்!

•உன் பெயரை
நெஞ்சில் சுமந்து

பச்சை குத்திய மார்புடன்

விழுப்புண் பட்ட

வேந்தனைப்போல்

வீறுநடை போட்டிருக்கலாம்!

•உன்னை மட்டுமே
காதலித்து

வாழ்நாள் சாதனையாய்

என் வாலிபத்தை

வென்றிருக்கலாம்!

அலைபேசியும்,கணினியும் அற்ற

அக்காலத்தில்

நம் காதல் வந்திருந்தால்!

•எவ்வித சுவாரசியமுமின்றி
அலைபேசியில்

hi என்றும்

சமூக வலைப்பின்னலில்

bye என்றும்

பொறுப்பற்று அலட்சியமானது

காலம் கடந்து வருகின்ற

நம் கணினிக் காதல்கள்!





_________________
நட்புடன்.............. அருண்

God Gave Me Nothing I wanted,
He Gave Me Everything I Needed..!
avatar
AruN

Posts : 279
Join date : 2010-12-11

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum