Latest topics
CONTACT ADMIN

*~*மீண்டும் பிரம்மாண்ட எந்திர கூட்டணி!*~*

View previous topic View next topic Go down

*~*மீண்டும் பிரம்மாண்ட எந்திர கூட்டணி!*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 11:07 pm

மீண்டும் பிரம்மாண்ட எந்திர கூட்டணி!






'எந்திரன்' இரண்டாம் பாகத்துக்காக ஷங்கர்-ரஜினி மீண்டும் இணைகிறார்கள். ஆமாங்க! 'எந்திரன்' இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் தயாரிப்பது என்ற முடிவுக்கு சன் பிக்சர்ஸ் வந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி, சக்ஷேனா விளக்கம் அளித்துள்ளார். 'ஆடுகளம்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜெயம் ரவி நடித்திருக்கும் 'எங்கேயும் காதல்' படத்தையும் பார்த்தேன். அந்தப் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளோம். இதற்கிடையில் சன் பிக்ஸர் அடுத்து தயாரிக்க இருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படம் எது என்று கேட்கிறார்கள். 'எந்திரனுக்கு' பிறகு சன் பிக்சர்ஸின் நேரடித் தயாரிப்பு 'எந்திரன்' பாகம் இரண்டாகத்தான் இருக்கும். இதைப்பற்றி ரஜினியிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன் ரெடியாக இருக்கிறார். கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் பட்ஜெட்டை 'எந்திரன்' பாகம் இரண்டு தாண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பிரம்மாண்டமான படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகே முறையான அறிவிப்பை வெளியிட முடியும், என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தபடம் 'ராணா'வுக்குப் பிறகு தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரொம்ப ஸ்ட்ராங்கான கூட்டணியா அமைஞ்சுப்போச்சு.... அடுத்து 3டி ப்ளாக் பஸ்டர் ட்ரீட்தான் பாக்கி!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum