Latest topics
CONTACT ADMIN

*~*சீயான் விக்ரம் டாக்டரானார்!*~*

Go down

*~*சீயான் விக்ரம் டாக்டரானார்!*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 10:52 pm

சீயான் விக்ரம் டாக்டரானார்!







ரசிகர்களால் சீயான் என்று செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் விக்ரமை இனி டாக்டர் விக்ரம் என்று மரியாதையுடன் அழைக்கப்போகிறார்கள். ஆம், நடிகர் விக்ரமிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கபோகிறது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். 'சேது' படத்திற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், விக்ரமின் திறமை என்னவோ 'சேது' படத்திற்குப் பிறகுதான் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 'தில்', 'தூள்', 'அந்நியன்' போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம், 'காசி', 'பிதாமகன்' போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து பல விருதுகளையும் வாங்கி குவித்தார். இப்படி பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியமைக்கு, அதனை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த டாக்டர் பட்டத்தை நடிகர் விக்ரமிற்கு வழங்குவதாக, இத்தாலியிலுள்ள 'யுவர்சிட்டா பாபுலர் ஸ்டடி டீ-மிலானோ' (Universita Popolare Degli Studi Di Milano) பல்கலைகழகத்தின் இயக்குநர்களும், செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு, மே மாதம் 29ஆம் தேதியன்று இத்தாலி யூனிவர்சிட்டியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விக்ரம் இவ்விருதினை பெறுகிறார். வெளிநாட்டு பல்கலைகழகம் தமிழ் நடிகர் ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகுக்கே பெருமை சேர்த்திருக்கும் சீயானுக்கு கூடலின் வாழ்த்து மடல்கள்!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum