Latest topics
CONTACT ADMIN

*~*கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை!*~*

Go down

*~*கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை!*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 10:43 pm

கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை!






தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நடிகையான நமிதா, இப்போது ஒரு பிரம்மாண்ட பிஸினஸிலும் குதித்துள்ளார். கோடிக்கணக்கான மதிப்பில் பெரிய சொகுசு வீடுகளை உருவாக்கித் தரும் ரியல் எஸ்டேட் பிஸினஸ்தான் அது! பூமியில் ஒரு சொர்க்கம் என்று வர்ணிக்கும் அளவுக்கு, பார்ப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் 'ஆம்பி வேலி' நகரில் (மும்பை அருகே உள்ள மலைப் பிரதேசம்) அழகழகான வீடுகளை உருவாக்கித் தரும் நிறுவனத்தை தனது நண்பரும் பங்குதாரருமான பரத் கபூருடன் இணைந்து ஆரம்பித்துள்ளார் நமிதா. மிகச் சிறந்த வீடுகளை, பல்வேறு அழகிய டிசைன்களில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறார்கள். நமிதாவின் இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே சில திரையுலகப் பிரபலங்கள் ஆம்பி வேலியில் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படும் இந்த வீடுகளின் விலை ரூ.3 கோடியிலிருந்து 18 கோடி வரை, பரப்பளவு, டிசைன்களுக்கேற்ப மாறுபடுகிறது. மும்பையைச் சேர்ந்த 'நூரேன் ஜுமானி' என்ற பிரபல இன்டீரியர் டிசைனருடன் இணைந்து புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நமிதாவும் அவரது தலைமையில் இயங்கும் குழுவினரும். கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமிதா. சென்னையிலும் இதுபோன்ற அழகிய வீடுகளை உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமிதா. அழகு தேவதை அடுக்கு மாடி கட்டுனா குடியிருக்க கசக்குமா என்ன..?
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum