Latest topics
CONTACT ADMIN

*~*ஜப்பான் அணு உலைகள் வெடிக்கும் ஆபத்து: நெருக்கடி நிலை பிரகடனம்*~*

Go down

*~*ஜப்பான் அணு உலைகள் வெடிக்கும் ஆபத்து: நெருக்கடி நிலை பிரகடனம்*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 9:09 pm

ஜப்பான் அணு உலைகள் வெடிக்கும் ஆபத்து: நெருக்கடி நிலை பிரகடனம்டோக்கியோ, மார்ச். 12-

மிகப்பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளில் சில வெப்பம் காரணமாக வெடிக்கும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஏதாவது ஒரு அணு உலை வெடித்தாலும், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்தபோது ஏற்பட்டதைவிட பல மடங்கு அதிக சேதத்தை ஜப்பானும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால், மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஃபுகுகிமா பகுதியில் உள்ள பெரிய அணு உலையில் வழக்கத்தை விட 1000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு வெளிப்பட ஆரம்பித்துள்ளது. டோக்கியோவிலிருந்கு 170 கிமீ தொலைவில் உள்ளது இந்த அணுஉலை. பூகம்பம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், இந்த அணு உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்குத் தேவையான தண்ணீ­ர் ஏற்றப்படவில்லை என்றும், ஜெனரேட்டர்கள் மூலம் இதனைச் சரிசெய்ய முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த முயற்சியில் வெற்றிகிட்டாததால், அணுஉலையின் வெப்பம் அதிகரித்து, வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த 3000-க்கும் அதிகமான மக்கள் அலறியடித்துக் கொண்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதனை ஜப்பானிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.

ஜப்பானின் கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் 3 அணு உலைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள மேலும் 6 அணு உலைகள் மூடப்பட்டன. அங்கெல்லாம் அணுஉலைகள் குளிர்ந்த நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று ஜப்பான் அறிவித்துள்ளது. அதேநேரம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், விரைவில் ஃபுகுகிமா அணுஉலையின் வெப்பத்தடுப்பான்கள் செயல்படத் துவங்கும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை மத்திய ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. ஜப்பானில் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மீட்பு பணிக்கு உதவ 45 நாடுகள் முன்வந்துள்ளன. நிவாரண உதவிகள் வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன

நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum